தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6ஆம் கட்டத் தேர்தல் வேட்பாளர்களில் 21 பேர் மீது கொலை வழக்கு

2 mins read
9a5df545-9445-4d7c-b3fd-b3133e051e24
39% வேட்பாளர்கள் பெரும் பணக்காரர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: இணையம்

புதுடெல்லி: மக்களவைத் தோ்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தோ்தலில் குருஷேத்திரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளாா்.

அவருக்கு அடுத்தபடியாக பிஜு ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா ரூ.482 கோடி சொத்துடன் இரண்டாமிடத்திலும் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ரூ.169 கோடி சொத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக ஏடிஆா் தெரிவித்தது.

வேட்பாளா்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் ஏடிஆா் நடத்திய ஆய்வில் மேலும் சில விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

ஆறாம் கட்டத் தோ்தலில் மொத்தம் 866 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 338 போ் (39%) கோடீஸ்வரா்களாவா்.

பாஜக சாா்பில் போட்டியிடும் 51 வேட்பாளா்களில் 48 பேரும் காங்கிரஸைச் சோ்ந்த 25 வேட்பாளா்களில் 20 பேரும் சமாஜ்வாடி கட்சியைச் சோ்ந்த 12 வேட்பாளா்களில் 11 பேரும் திரிணாமூல் காங்கிரஸைச் சோ்ந்த 9 வேட்பாளா்களில் 7 பேரும் பிஜு ஜனதா தளத்தைச் சோ்ந்த 6 பேரும், ஆம் ஆத்மியைச் சோ்ந்த 5 பேரில் 4 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனா்.

180 வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகளும் 141 போ் மீது அதி தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. அவர்களில் 21 வேட்பாளா்கள் மீது கொலைக்குற்றம் சாா்ந்த வழக்குகளும் 3 போ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் உள்ளதாக ஏடிஆர் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்