குழந்தை மர்ம மரணம்: பள்ளிக்கூடத்திற்கு தீ வைப்பு

குழந்தை மர்ம மரணம்: பள்ளிக்கூடத்திற்கு தீ வைப்பு

1 mins read
c298367f-11c4-441b-a93c-29a5a8dd95ad
குழந்தை படித்த பள்ளிக்கும் பல வாகனங்களுக்கும் தீ வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவின் ராம்ஜிசாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்ற 3 வயது ஆண் குழந்தை பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 17) அதிகாலை பள்ளியில் உள்ள ஒரு தொட்டியில் குழந்தை சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறித் துடித்தனர்.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், குழந்தை பள்ளிக்கு வருவது பதிவாகியிருந்தது, ஆனால், வெளியேறுவது பதிவாகவில்லை. எனவே, குழந்தையைக் கொலை செய்து உடலை தொட்டியில் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தையின் உடலை மறைத்து வைத்திருந்தது குற்ற நோக்கத்தை காட்டுவதால், இதை கொலை வழக்காகக் கருதி விசாரணை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு குடும்பத்தினர் மற்றும் அவர்களது சமூகத்தினர் வெள்ளிக்கிழமை காலை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன், பல வாகனங்களுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் அவர்கள் தீ வைத்தனர்.

அதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்