ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
தனது அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “சில பொத்தான்களை அமுக்கி ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் போட்டியிடும் தொகுதியல்ல இந்த ரேபரேலி தொகுதி. இங்குள்ள மக்கள் எங்களில் யாராவது ஒருவர் சுற்றி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
“நாங்கள் இங்கு கடுமையாக உழைத்துள்ளோம்.இந்தத் தொகுதி மக்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே அணுக்கமான குடும்பப் பிணைப்பு உள்ளது,” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ரேபரேலி எந்த குடும்பத்தின் தொகுதியும் கிடையாது. அது மக்களுடைய தொகுதி,” எனக் கூறியுள்ளார்.

