லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, இது வரை நடைபெற்ற தேர்தலில் 270 தொகுதிகளில் வென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
வேட்பாளா்கள் ஸ்மிருதி இரானி, தினேஷ் பிரதாப் ஆகியோரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
“மக்களவைக்கு நடந்து முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் பிரதமா் மோடிக்கு 270 தொகுதிகளில் வெற்றி கிடைத்துவிட்டது,” என்று அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியிருந்ததற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளாா்.
ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தோ்தலில் இதுவரை 379 தொகுதிகளுக்கு (4 கட்டங்கள்) வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைத் தோ்தலும் நடைபெறுகிறது.
அம்மாநிலத்தின் ரூா்கேலா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றுப் பேசினார்.
“ஒடிசாவை ஒடிய மொழியில்தான் ஆள வேண்டும், தமிழில் அல்ல (முதல்வா் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் தமிழகத்தைச் சோ்ந்த வி.கே.பாண்டியனை அவர் மறைமுகமாக விமா்சித்தாா்). கடந்த 25 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இம்மாநிலம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“ஒடிசாவின் பெருமை, கலாசாரம், பாரம்பரியம், மொழியை மீட்டெடுக்கும் தோ்தல் இதுவாகும். இம்மாநிலத்தில் 75 சட்டமன்றத் தொகுதிகளுக்குமேல் வென்று பாஜக ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.
ஐந்தாம் கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் (மே 18) நிறைவடைந்தது. இந்த ஐந்தாம் கட்டத்தின் நட்சத்திர வேட்பாளர்களாக ரேபரேலியில் ராகுல் காந்தியும் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் லக்னோவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பீகாரில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவும் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை திங்கட்கிழமை (மே 20) நடைபெற உள்ளது.
பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.