தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவனின் உயிர் காக்க ரூ.9 கோடி நிதி திரட்டிய நடிகர், கிரிக்கெட் வீரர், பொதுமக்கள்

1 mins read
24fb7713-3d79-4587-b9ec-69f1e5d4c9aa
பாதிக்கப்பட்ட சிறுவன் ஹிருதயான்ஷ் ஷர்மா, நிதி திரட்டுக்கு முக்கிய பங்காற்றிய பாலிவுட் நடிகர் சோனு சூட். - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காவல் ஆய்வாளர் நரேஷ் ஷர்மாவின் இரண்டு வயது மகனின் உயிரைக் காப்பாற்ற காய்கறிகள், பழம் விற்பவர்கள் முதல் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் உள்ளிட்டோரின் முயற்சியால் ரூ.9 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

நரேஷின் மகன் ஹிருதயான்ஷ் ஷர்மா ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மரபணு ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கமுடியும் என்று கூறப்படுகிறது. உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாக இந்த மரபணு சிகிச்சைக்கான ஊசியும் உள்ளது. இதன் விலை ரூ.17 கோடி.

ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களுக்குள் ரூ.9 கோடி திரட்டப்பட்டு ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஓராண்டுக்குள் மூன்று தவணைகளாகச் செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகர் சோனு சூட், கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டு குறித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, ஜெய்ப்பூரில் பழம், காய்கறி விற்பனையாளர்கள், அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரும் நிதி திரட்டில் பங்களித்தனர். மாநிலக் காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கினர்.

குறிப்புச் சொற்கள்