அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

1 mins read
02922b16-53fe-4237-9810-ba96f929a902
குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் புகைப்படத்தை அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். - படம்: எக்ஸ் தளம்
Google News Preferred Icon

கவ்ஹாத்தி: அசாம் மாநிலத்தில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலத்தில் இருந்து அசாமின் கச்சார் மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்ட 10.333 கிலோ ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருளின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.105 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் இளைஞர்கள் இதுபோன்ற வலையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு ஹேமந்த் பிஸ்வா வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்