புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவை மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் வீட்டிலிருந்தபடியே பதிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், முன்னாள் துணை அதிபர் முகமது ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்தபடி தங்கள் வாக்குகளை சனிக்கிழமை மாலை பதிவு செய்தனர்.