மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நீண்டநாள்களாக கனடா குடியுரிமை வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தமது கனடா குடியுரிமையைத் துறந்துவிட்டு இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கடந்த ஆண்டு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியக் குடிமகனாக நடிகர் அக்ஷய் குமார் தமது முதல் வாக்கை திங்கட்கிழமை (மே 20) மும்பையில் பதிவு செய்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா வளர்ச்சி அடைவதோடு வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
“எனவே அதை மனதில் வைத்து வாக்களித்தேன். மக்கள் தங்களுக்கு யார் சரியென்று படுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.