தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறந்த தாயின் உடலோடு வசித்த மகள்

2 mins read
4b499305-49bf-4ecb-ab85-f4762faec623
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. - படம்: தினத்தந்தி இணையம்

பெங்களூரு: இறந்த தாயின் உடலோடு நான்கு நாள் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா முதுகோபாடி அருகே தாசனஹடி பகுதியை;ச் சேர்ந்தவர் ஜெயந்தி ஷெட்டி, 62. இவரது மகள் பிரகதி ஷெட்டி, 32.

ஜெயந்தியின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதியை அவர் தனியாகக் கவனித்து வந்தார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு அண்மையில் கால் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. அந்த நிலையிலும் மகள் பிரகதியை ஜெயந்தி பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக ஜெயந்தி வீட்டில் மின்விளக்கு ஒளி இல்லை. வீடும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் தாயும் மகளும் கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். ஆனால் கடந்த 16ஆம் தேதி அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள், ஜெயந்தியின் கைப்பேசியை தொடர்புகொண்டுள்ளனர். அப்போது வீட்டில் கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அழைப்பை எடுத்து ஜெயந்தி பேசவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது பிரகதி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக குந்தாப்புரா காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் வீட்டில் ஜெயந்தியின் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மயங்கியிருந்த பிரகதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது மகள் பிரகதி மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரகதியும் உயிரிழந்தார்.

காவல்துறை நடத்திய விசாரணையில் ஜெயந்தி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்துவிட்டார் என்பது தெரிந்தது.

இது, மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதிக்கு தெரியவில்லை. இறந்த தாயின் உடலுடன் 4 நாள்களாக பிரகதி தண்ணீர், உணவு இன்றி இருந்துள்ளார்.

இதுகுறித்து குந்தாப்புரா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்