5ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு

2 mins read
6d1d403c-2743-4864-a711-f4144c5c143e
5ஆம் கட்ட வாக்குப் பதிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் (இடம்), அவரது மகன் அர்ஜுனும் மும்பையில் உள்ள வாக்குச் சாவடியில் மே 20ஆம் தேதி வாக்களித்தனர். - படம்: ஏஏஃப்பி

மும்பை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 20) நிறைவு பெற்றது.

நாட்டில் 18வது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு அடைந்துள்ளன.

ஐந்தாம் கட்டமாக, உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு திங்கட்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

வாக்குப் பதிவு காரணமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஐந்தாம் கட்டத் தோ்தலில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 8.95 கோடி. இவா்களில் பெண்கள் 4.26 கோடி போ். இவா்கள் வாக்களிக்க வசதியாக 94,732 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9.47 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.

மக்களவைக்கான 6, 7-ஆம் கட்ட வாக்குப் பதிவுகள் மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்