தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல்: மாதம் தலா ரூ.20 ஆயிரம் சம்பளம்

2 mins read
f6c8ff08-2861-426b-8e5a-eefda0f79ca6
கோப்புப் படம். - ஊடகம்

பெங்களூரு: நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருடுவதற்காகவே நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நிறுவனம் திருடும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.20,000 வரை சம்பளம் கொடுத்து வந்த தகவலும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம் கொரட்டகெரே காவலர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, திருடர்கள் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தாங்கள் பெங்களூரு பசவேசுவரா நகரைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறினர். வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் ஆகிய மூவரில் வெங்கடேஷ் திருட்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ராகவேந்திரா, விக்னேஷ் பட்டீலின் வேலைக்கு வெங்கடேஷ் ரூ.20,000 சம்பளம் கொடுத்துள்ளார்.

வெங்கடேஷ், ராகவேந்திரா திருடும் பொருள்களை வினேஷ் பட்டீல் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

தும்கூரு மாவட்டத்தில் கேபிள் வயர்களைத் திருடுவதுதான் வெங்கடேஷ், ராகவேந்திராவின் முக்கிய வேலை. இதுபோல், கடந்த வாரம் கொரட்டகெரே அருகே உள்ள வட்டரகெரே கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேபிள் வயர்கள் திருடு போனதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களை சோதித்தபோது, அதில் வெங்கடேசும் ராகவேந்திராவும் திருடுவது பதிவாகி இருந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருடர்களிடம் இருந்து ஒரு காரும் கேபிள் வயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடமும் கொரட்டகெரே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்