தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகுஇண்டியா கூட்டணி ஆட்சி’

1 mins read
1839d946-eb68-4329-9a89-55329ef90580
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இண்டியா கூட்டணிதான் ஆட்யில் அமரும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் காணொளி வாயிலாக அவர் பேசினார்.

“நாடாளுமன்றத் தேர்தலின் ஒவ்வொரு கட்டமும் முடிவடையும்போது, மோடி அரசாங்கம் வெளியேறி வருகிறது என்பதும், ஜூன் 4ஆம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது என்பதும் தெளிவாகிறது,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

“அமித்ஷா, பிரதமரால் நீங்கள் வாரிசாக அறிவிக்கப்பட்டீர்கள். அதனால் நீங்கள் ஆணவத்தை காட்டுகிறீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் பிரதமராகவில்லை. கெஜ்ரிவாலுக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை என்றும், பாகிஸ்தானில் ஆதரவாளர்கள் அதிகம் என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். நீங்கள் என்னை அவமதிக்கலாம். ஆனால் நாட்டு மக்களை சபிக்காதீர்கள். பொதுமக்களை திட்டினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்