‘3வது முறையாக ஆட்சிஅமைப்பார் மோடி’

‘3வது முறையாக ஆட்சிஅமைப்பார் மோடி’

1 mins read
ff847666-df14-42f2-a120-c01a7ea29604
பிரசாந்த் கிஷோர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆருடம் கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். 2019ஆம் ஆண்டில் கிடைத்த அதே எண்ணிக்கை அல்லது அதைவிட சற்று அதிகமான எண்ணிக்கையில் ஆட்சிக்கு வரும். பாரதிய ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் போட்டியாளர்கள் இல்லை,” என்று ஆங்கில தொலைக்காட்சி ஒளிவழிக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

“பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பரவலான கோபத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. மேற்கு மற்றும் வடக்கில் பா.ஜனதாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை,” என்று மேலும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

6வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு வரும் 25ஆம் தேதியும் கடைசி கட்டமாக 57 இடங்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்