அசாமில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 30 பாம்புகள்

அசாமில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 30 பாம்புகள்

1 mins read
a8890e1c-27fe-4a10-9a03-aee4311a6d32
கலியாபோர் பகுதிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து பாம்புகள் ஊர்ந்து சென்றதாக பாம்புகளை மீட்ட சஞ்சிப் டேகா கூறினார். - படம்: ஏஎன்ஐ ஊடகம்
multi-img1 of 2

நாகோன்: அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 30க்கும் மேற்பட்ட குட்டிப் பாம்புகள் ஊர்ந்து சென்றன.

சஞ்சிப் டேகா என்ற இளையரால் அந்தப் பாம்புகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலியாபோர் பகுதிக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் கழிவறையில் இருந்து அந்தப் பாம்புகள் ஊர்ந்து சென்றதாக சஞ்சிப் டேகா கூறினார்.

இதுகுறித்து டேகா மேலும் கூறுகையில், “பாம்புகள் இருப்பதாக வீட்டின் உரிமையாளர் எனக்கு தகவல் கூறியதை அடுத்து அந்தக் குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்றேன்.

“புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் கழிவறையில் இருந்து ஏறக்குறைய 30 பாம்புகள் ஊர்ந்து சென்றன. அவற்றை மீட்டு வனப்பகுதிகளில் விடுவித்தேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்