பாலத்திலிருந்து விழுந்த பேருந்து: ஒருவர் மரணம், 22 பேர் காயம்

பாலத்திலிருந்து விழுந்த பேருந்து: ஒருவர் மரணம், 22 பேர் காயம்

படம்: என்டிடிவி

29 May 2024 - 9:58 pm

1 mins read

ஜெய்ப்பூர்: ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூர் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று புதன்கிழமை (மே 29) காலை 5.30 மணியளவில், பாலத்திலிருந்து விழுந்ததில் ஒருவர் மாண்டார். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

தௌசா நகருக்கு அருகே, டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் சாலைத்தடுப்பைக் கடந்து அந்தப் பேருந்து தலைகுப்புறக் கவிழ்ந்ததாகக் கூறப்பட்டது.

பேருந்து ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அந்த வட்டாரவாசிகள் காவல்துறைக்குத் தகவல் தந்தனர்.

காயமடைந்தவர்கள் தௌசா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மாண்ட பயணி, 19 வயது அங்கிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்