ரேஷன் ஊழல்: வங்காள நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை

ரேஷன் ஊழல்: வங்காள நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை

1 mins read
5d8b32f4-ce57-40f2-a7cd-46e1109fb7ef
மேற்கு வங்காள நடிகை ரிதுபர்ணா சென்குப்தா. - கோப்புப்படம்: ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காள நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் விசாரணை மேற்கொள்ள ஜூன் 5ஆம் தேதி முன்னிலையாகுமாறு அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு ரோஸ் வேலி நிதி நிறுவன ஊழல் தொடர்பாக நடிகை ரிதுபர்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது ரேஷன் ஊழல் வழக்கில் ரிதுபர்ணாவிற்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ரேஷன் ஊழல் தொடர்பாக மேற்கு வங்கத்தின் உணவு மற்றும் விநியோக அமைச்சராக இருந்த ஜோதிபிரியா மல்லிக் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்