நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்திய மக்களவைத் தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104 விழுக்காடு அதிகம்.
மக்களவைத் தேர்தல்கள் தொடர்பான இந்தப் புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் 677 கட்சிகளும் 2014 தேர்தலில் 464 கட்சிகளும் 2009ல் 368 கட்சிகளும் போட்டியிட்டன.
தற்போதைய தேர்லில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 8,360.
இவர்களில் 8,337 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆராய்ந்தன.
மொத்த வேட்பாளர்களில் தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 1,333 பேர். மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 532, பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 2,850 பேர், சுயேச்சை வேட்பாளர்கள் 3,915 பேர்.
தேசிய கட்சிகளின் 1,333 வேட்பாளர்களில் 443 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் 295 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகளும் உள்ளன.
மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களில் 249 பேர் மீது குற்றவியல் வழக்குகளும், 169 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தேசிய கட்சிகளில் 906 பேரும் மாநிலக் கட்சிகளில் 421 பேரும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 572 பேரும் சுயேச்சைகளில் 673 பேரும் பெரும் பணக்காரர்களாக உள்ளனர் என்ற விவரத்தையும் ஏடிஆர் அமைப்பு வெளியிட்டு உள்ளது.