ரூ.12 கோடி பரிசு: ஆறு ஆண்டுகளாக பரிசுச் சீட்டு வாங்கிய மத்திய ரிசர்வ் போலிஸ் படை முன்னாள் வீரருக்கு இன்ப அதிர்ச்சி

ரூ.12 கோடி பரிசு: ஆறு ஆண்டுகளாக பரிசுச் சீட்டு வாங்கிய மத்திய ரிசர்வ் போலிஸ் படை முன்னாள் வீரருக்கு இன்ப அதிர்ச்சி

2 mins read
16f5fe39-84ab-46f8-979c-ea1e6effb685
பரிசுத் தொகையைக் கொண்டு முதலில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளார் விஷ்வாம்பரன். - படம்: ஊடகம்

ஆலப்புழா: கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய ரிசர்வ் போலிஸ் படை வீரருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

விஷ்வாம்பரன் என்ற அந்த வீரர், பணி ஓய்வுபெற்ற பிறகு ஆலப்புழா மாவட்டத்தில் வங்கிக் கிளையில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார்.

லாட்டரிச் சீட்டு வாங்குவதில் அதீத ஆர்வம் உள்ள விஷ்வாம்பரன், மாதந்தோறும் 20 பரிசுச் சீட்டுகளாவது வாங்குவார். இம்முறை ஆலப்புழாவைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு விழுந்திருப்பதாகக் கேள்விப்பட்டதை அடுத்து உடனடியாக தாம் வாங்கிய பரிசுச் சீட்டுகளை சரி பார்த்துள்ளார் விஷ்வாம்பரன்.

அப்போது முதல் பரிசான ரூ.12 கோடி தாம் வாங்கிய சீட்டுக்கு விழுந்திருப்பதைக் கண்டு வியப்பிலும் இன்ப அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார். பரிசு விழுந்திருப்பதை அறிந்த அந்த தருணத்தில் அவரிடம் ரூ. 5,000 மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள் இருந்தன.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் லாட்டரிச் சீட்டு வாங்க ரூ.500 ஒதுக்கி வந்துள்ளார் விஷ்வாம்பரன். ஆனால் இந்த முறை மட்டும் ரூ.5,000 மதிப்புள்ள பரிசுச் சீட்டுகளை வாங்கியதாகவும் அவற்றுள் ஒரு சீட்டுக்குத்தான் பரிசு விழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“பரிசுத் தொகையை வைத்து ஒரு வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். மற்றபடி பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து முடிவு செய்யவில்லை.

“எனது பிள்ளைகளுக்கும் பணம் தேவைப்படும் நலிந்தோருக்கும் கணிசமான தொகை செலவிடுவேன். முன்பு போல் மதுபானம் வாங்க செலவிடமாட்டேன்,” என்கிறார் விஷ்வாம்பரன்.

பரிசு குறித்த விவரங்கள் வெளியாக இரண்டு நாள் மட்டுமே இருந்த நிலையில், அவர் முதல் பரிசுக்கான சீட்டை வாங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்