தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கு வங்க வாக்குச்சாவடியில் வன்முறை; வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன

2 mins read
2627f841-9b4e-4260-bad3-b0da9331abc5
மேற்கு வங்கத்தின் குல்தாய் பகுதியில் வாக்குச்சாவடியில் நடந்த வன்முறையில் அங்கிருந்த வாக்குப் பதிவு மற்றும் பதிவு சார்பார்க்கும் இயந்திரங்களைத் தூக்கி அருகே இருந்த கால்வாயில் வீசினர் கலவரக்காரர்கள். - படம்: ஊடகம்

கோல்கத்தா: மக்களவைத் தேர்தலின் 7வது கட்ட இறுதி வாக்களிப்பு சனிக்கிழமை நடந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், குல்தாய் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே நடந்த வன்முறையில் வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு பதிவு மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் கால்வாயில் தூக்கி வீசப்பட்டன. மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெறும் 9 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தும் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

தூக்கி எறியப்பட்ட அந்த எந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மாற்று இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால் வாக்களிப்பில் எவ்விதக் குளறுபடியும் ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்தது.

பங்கர் என்னும் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணிக் கட்சித் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அங்கு கூட்டத்தை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம்

இந்தியாவின் உயரமான வாக்குச் சாவடி அமைந்திருக்கும் இமாச்சலப் பிரதேசத்தின்  ’தஷிகாங்’  என்னும் மலையூரில் வாக்களிக்க வருவோர் தங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள பதாகை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் தஷிகாங் மக்கள்.
இந்தியாவின் உயரமான வாக்குச் சாவடி அமைந்திருக்கும் இமாச்சலப் பிரதேசத்தின்  ’தஷிகாங்’  என்னும் மலையூரில் வாக்களிக்க வருவோர் தங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள பதாகை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் தஷிகாங் மக்கள். - படம்: ஊடகம்

மண்டி: இமாச்சல பிரதேசத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும், 6 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு காலை 11 மணி நிலவரப்படி 31.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மண்டி மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராக உள்ள நடிகை கங்கனா ரணாவத்தும், காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்குக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மண்டி மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடி என்ற அடையாளத்துடன் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தின் ’தஷிகாங்’ கிராமம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பகுதி, கடல் மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியின் கீழ் தஷிகாங், கேடே என இரண்டு மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களிலும் மொத்த வாக்காளர்கள் 62 பேர் மட்டுமே.

குறிப்புச் சொற்கள்