உ.பி.யில் கடும் வெப்பம்: தேர்தல் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்

உ.பி.யில் கடும் வெப்பம்: தேர்தல் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்

1 mins read
7d5095f8-0ff5-42e6-9f75-e950b46b42d0
உ.பி.யில் ஏழாம் கட்டத் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் 11 பேர் திடீரென உடல்நிலைப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். - காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்.

சோன்பத்ரா: உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளில் இருவர், திடீரென மயங்கி விழுந்தனர். மேலும் 9 பேருக்கு கடுமையாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் இருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதற்கு அங்கு அடிக்கும் கொளுத்தும் வெய்யில் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த அதிகாரிகள் இறந்ததற்கான சரியான காரணம், உடற்கூராய்வுக்குப் பின்தான் தெரியவரும் என்று சோன்பத்ரா மாவட்ட நீதிபதி சந்திரா விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பிற்பகலில் ராபர்ட்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள பலதுறைத் தொழிற் கல்லூரி கல்லூரியிலிருந்து தேர்தல் பணிக்காக அவர்கள் வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது திடீரென 11 பேர் நோய்வாய்ப்பட்டதாக திரு சிங் கூறினார். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான 13 தொகுதிகளுக்கு இறுதிக் கட்ட வாக்களிப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்