தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அம்பானியை வீழ்த்திய அதானி; மீண்டும் ஆசியாவின் பெரும் பணக்காரரானார்

1 mins read
5e4c76fc-86aa-4dd7-9b9a-ef60b6b8b40c
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை முகேஷ் அம்பானியிடமிருந்து மீண்டும் தட்டிப் பறித்துள்ளார் கௌதம் அதானி.

புளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை விஞ்சியுள்ளார் கௌதம் அதானி.

இவர், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் கவர்ந்துள்ளார்.

சனிக்கிழமை (ஜூன் 1) மாலை நிலவரப்படி சொத்துகள் குறித்த அறிக்கை வெளிவந்தது.

அதன்படி, அம்பானியின் 109 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் ஒப்பிடும்போது, ​​அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த சில நாள்களாகவே அதானி குழுமத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன. இது அம்பானியை கௌதம் அதானி முந்தியதற்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முன்னோக்கிச் செல்லும் பாதை அசாதாரணமான சாத்தியக்கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் இதுவரை இருந்ததை விடவும் இப்போதும் மிகவும் வலுவாக உள்ளது உறுதி,” என கௌதம் அதானி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்