அடுத்தடுத்து ஏழு கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

அடுத்தடுத்து ஏழு கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

1 mins read
e9fc68f4-e9ca-4a92-ab5c-78288e1e6706
கோப்புப் படம் - ஊடகம்

புதுடெல்லி: பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஏழு முக்கிய கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெமல் புயல் பாதிப்பு, வட மாநில மக்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்சி அமையும் சூழலில், அடுத்த நூறு நாள்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட ஏழு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஜூன் 5ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள உலகச் சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னதாக, பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மதிப்பாய்வு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்று தேசிய ஜனநாயகக் கட்சிகளும் பாஜகவின் கனவு பலிக்காது என இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த 28 கட்சிகளும் கூறிவருகின்றன.

குறிப்புச் சொற்கள்