திருமணத்துக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்: டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி

திருமணத்துக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்: டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி

1 mins read
8a188121-b3d4-428c-8491-4e49534019d7
மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர். - படம்: இந்திய ஊடகம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்தியப் பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, பாரந்தூக்கி இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 15 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“இதுவரை 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மோசமான காயங்களுக்கு உள்ளான இருவர் போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,” என்று மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் டிக்சித் தெரிவித்தார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்