சிக்ஸர் அடித்த அடுத்த நொடியே சரிந்து விழுந்து உயிரிழந்த இளைஞர்

1 mins read
d9646f6c-5d7a-4eea-aa00-4f45dd6342ff
சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதற வைக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகிறது. கிரிக்கெட்டைப் பார்ப்பது என்பதைத் தாண்டி இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விளையாடும் ஆட்டமாக கிரிக்கெட் உள்ளது.

அந்த வகையில் மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையும் கலங்கடித்துள்ளது. மும்பை மாநகரின் தானே பகுதியில் மீரா சாலையின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் பிங்க் நிற மேலாடை அணிந்த இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து வீச்சாளரின் தலைக்கு மேல் சிக்சர் ஒன்றை அடித்துப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்துக்கு தயாராக நின்றுகொண்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

சக ஆட்டக்காரர்கள் உடனே அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தும் எதுவும் பயனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் மனதை பதற வைத்தது.

அந்த நபர் யார் என்ற விவபரம் இன்னும் தெரியவராத நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக மாரடைப்பு மரணங்களும், வெப்பத் தாக்குதல் மரணங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்