திருவள்ளூர்: திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக செய்தி சேகரிக்க ஏராளமான செய்தியாளர்கள் வந்திருந்தனர்.
அவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் செய்தியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு அருகே அனுமதிக்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில், காவல்துறையினர் அதற்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாகக் கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பை சட்டமன்றத் தொகுதி வாக்குப்பெட்டிகள் உள்ள பகுதிக்கு முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.