மும்பை: இந்திய பங்குகள் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமாக ஜூன் 4ஆம் தேதியன்று எட்டு விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது. அதாவது 2024ஆம் ஆண்டுக்கான லாபத்தை முழுமையாக அழித்துவிட்டது.
இந்தியாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பங்குகள் இந்தச் சரிவைச் சந்திதுள்ளன.
நிஃப்டி 50, பிற்பகல் 12.41மணிவாக்கில் 7.2 விழுக்காடு குறைந்து 21,605 புள்ளிகளில் முடிந்தது. சென்செக்ஸ் 6.6 விழுக்காடு குறைந்து 71,366 புள்ளிக்கு வந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னர் வெளியான கருத்துக்கணிப்புகள், ஆளும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருந்தன.
இதனால் பங்குச் சந்தை வர்த்தக நிலவரம் நன்றாக இருந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின்னர், பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது.
இது போன்ற ஏற்ற இறக்கங்கள் காரணமாக, பங்குச் சந்தை வர்த்தம் பாதிக்கப்படக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.