அண்மைய நிலவரம்: மோடி, ராகுல், அமித் ஷா, திருமாவளவன், சௌமியா அன்புமணி, விஜய பிரபாகரன் சாதிப்பார்களா?

அண்மைய நிலவரம்: மோடி, ராகுல், அமித் ஷா, திருமாவளவன், சௌமியா அன்புமணி, விஜய பிரபாகரன் சாதிப்பார்களா?

1 mins read
2473179a-3e8a-4437-a6de-b793716b0b77
(இடமிருந்து) ராகுல் காந்தி, நரேந்திர மோடி, அமித் ஷா. - படம்: ஊடகம்

இந்திய மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் இருப்பதால் தகவல் வெளியானது. எனினும், சிறிது நேரத்தில் அவர் 36,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவித்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் பின்தங்கி உள்ளதாக வெளியான முதற்கட்டத் தகவல் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அவர் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான ரேபரேலியிலும் முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா 50,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் அண்ணாமலை, இரண்டாவது சுற்றின் முடிவில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா, தர்மபுரி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ள தகவலை அறிந்து தேமுதிகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ பி பன்னீர்செல்வம், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பின்தங்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்