தேர்தல் முடிவுகள்: மின்னுவார்களா திரை நட்சத்திரங்கள்?

தேர்தல் முடிவுகள்: மின்னுவார்களா திரை நட்சத்திரங்கள்?

2 mins read
10ee0e7b-65d0-4de7-b773-846476a62448
நடிகைகள் ராதிகா, ரோஜா. - படங்கள்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தல் 2024ல் பல்வேறு அரசியல் கட்சிகள் நடிகர், நடிகையர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கின.

அந்த வகையில், கங்கனா ரணவத், ஹேம மாலினி, ரோஜா, ராதிகா ஆகிய நடிகைகள், சுரேஷ் கோபி, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட நடிகர்கள் முக்கியத் தொகுதிகளில் போட்டியிட்டனர்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் இமாச்சலப் பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணவத், இந்திய நேரப்படி ஜூன் 4 நண்பகல் (சிங்கப்பூரில் பிற்பகல் 2.30 மணி) நிலவரப்படி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

இதேபோல் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவின் திருச்சூர் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.

பாஜக சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஹேம மாலினி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 1,20,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

காலஞ்சென்ற நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை ராதிகா மூன்றாம் சுற்றின் முடிவில் மூன்றாவது இடத்தில் பின்தங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நகரி தொகுதியில் பின்தங்கியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பானுபிரகாஷ் சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

இதேபோல், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா, இந்துபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்