பாலியல் குற்றங்களில் கைதான ரேவண்ணா தோல்வி

1 mins read
5914c506-ea49-4e1f-bf83-a90e4b858675
பிரஜ்வல் ரேவண்ணா. - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியைத் தழுவியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரேயஸ் படேலிடம் 43,588 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவண்ணா தோல்வியடைந்தார்.

பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் ஆபாசக் காணொளிகள் தேர்தல் நேரத்தில் வெளியாயின. அவர் மீது பெண்கள் சிலர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அண்மையில் நாடு திரும்பிய அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சூழலில் தாம் போட்டியிட்ட ஹாசன் தொகுதியில் ரேவண்ணா தோல்வியடைந்தார்.

குறிப்புச் சொற்கள்