மும்பை: 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீடு 4,390 புள்ளிகள், அதாவது 5.3% சரிவு கண்டது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தையான ‘நிஃப்டி’ 1,379 புள்ளிகள், அதாவது 5.93% சரிவு கண்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னர் வெளியான கருத்துக்கணிப்புகள், ஆளும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருந்தன.
இதனால் பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் நன்றாக இருந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின்னர், பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது.
இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் காரணமாக, பங்குச்சந்தை வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்திய பங்குச்சந்தை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவைச் சந்தித்தது.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கிய சிறு நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டனர். 15 நிமிடங்களில் முதலீட்டாளர்கள் ஏறக்குறைய ரூ.14 லட்சம் கோடியை இழந்துவிட்டதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்ததுடன், முதலீட்டாளர்களுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.