தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இது வரலாற்றுச் சாதனை, பத்து ஆண்டு நல்லாட்சி தொடரும்: மோடி

1 mins read
8bce7f0b-eb64-4b25-960b-3f7ca8cd53a4
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சாதனை புரிந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

“தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இந்திய அளவில் ஒரு வரலாற்றுச் சாதனை.

“மக்களின் அன்பிற்கு அடிபணிகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், கடந்த பத்து ஆண்டுகால நல்லாட்சி தொடரும்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்காக கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை வணங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், தொண்டர்களின் கடின உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தமது பதிவில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தாம் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்