தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது

1 mins read
b4b27d75-ef3b-4a4d-a07e-3c71ef3f821d
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை நவீன் பட்நாயக் வழங்கினார்.  - படம்: இந்திய ஊடகம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நவீன் பட்நாயக் புதன்கிழமை (ஜூன் 05) முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

ஒடிசாவின் முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் 2000ஆம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அம்மாநிலத்தில் மொத்த 147 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக, 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒடிசாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்ட மன்றத்துக்கும் 4 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது.

சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தின் பிரணாப் பிரகாஷ் தாஸை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்