சிக்கிம்: இரண்டாவது முறையாக சிக்கிம் முதல்வராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்.
முதல்வர், அமைச்சர்களின் பதவியேற்பு விழா மாநிலத் தலைநகரான காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
“சிக்கிம் சட்டமன்றத் தேர்தல், ஒரே மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் எஸ்கேஎம் கட்சியின் வெற்றிக்கு, கட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. எஸ்கேஎம் தலைவர்கள், தொண்டர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கட்சியின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது” என்றார் பிரேம் சிங் தமாங்.
மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களில் எஸ்கேஎம் வெற்றி பெற்றது.