தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் சுவாரசியம்: சத்தமில்லாமல் சாதனைகளைச் செய்துள்ள வேட்பாளர்கள்

3 mins read
27301997-5a12-4b7c-91a6-394e7d9c2b02
சங்கர் லால்வானி. - படம்: ஊடகம்
multi-img1 of 3

ஹைதராபாத்: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் சத்தமின்றி பல சாதனைகளைச் செய்துள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி

தெலுங்கானா மாநிலத் தேர்தலில் புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள கடப்பா தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் 5 லட்சத்து 43,000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்றிருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரது இந்தச் சாதனையை நல்கொண்டா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரகுவீர் ரெட்டி தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முறியடித்துள்ளார். 5 லட்சத்து 59 ஆயிரத்து 906 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார். காங்கிரசின் கோட்டையான நல்கொண்டாவில் அவருக்கு இந்த அளவிற்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

சங்கர் லால்வானி

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பாஜக தலைவர் சங்கர் லால்வானி 10 லட்சத்து 8 ஆயிரத்து 77 வாக்குகள் அதிக அளவில் பெற்றிருந்தார். இது நாட்டு மக்களிடையே வியப்பை ஏற்படுத்திய நிலையில், இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்திராம் தனது வேட்புமனுவை மீட்டுக்கொண்டார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் வேட்பாளர் களத்தில் இல்லாததால் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் நோட்டாவுக்கு வாக்களித்தனர். இதனால் நோட்டாவுக்கு இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 676 வாக்குகள் பதிவாகின. நோட்டா வாக்குகளும் சாதனையாக இம்மாநிலத்தில் அதிகம் பதிவாகியுள்ளது.

ரகிபுல் ஹுசைன்

சாம் மாநிலத்தின் துப்ரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகிபுல் ஹுசைன் 10 லட்சத்து 12 ஆயிரத்து 476 வாக்குகள் பெற்றுள்ளார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பதுருதீன் அஜ்மலை எதிர்த்து அவர் இந்த அளவில் வெற்றி பெற்றார் என்பது சிறப்பம்சமாகும்.

சிவராஜ் சிங் சௌகான்

மத்தியப் பிரதேச மக்களால் மாமாஜி என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளகானின் செல்வாக்கு சிறிதும் குறையவில்லை என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து போட்டியிட்ட அவர், 8 லட்சத்து 21 ஆயிரத்து 408 வாக்குகள் வித்தியாசத்தில் விதிஷா தொகுதியில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 5வது முறையாக இவர் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

சி.ஆர். பாட்டீல்

குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் வெற்றியும் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. குஜராத்தில் இருந்து நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.பாட்டீல் 7 லட்சத்து 73 ஆயிரத்து 551 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா காந்திநகரில் போட்டியிட்டார். அவர் 7 லட்சத்து 44 ஆயிரத்து 716 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தாலும், தனது தொகுதிக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை. இருப்பினும், காந்திநகர் மக்கள் அவருக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

அபிஷேக் பானர்ஜி

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் டிஎம்சி தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி அமோக வெற்றிபெற்றுள்ளார். டைமண்ட் ஹார்பரில் போட்டியிட்ட அபிஷேக் பானர்ஜி 7 லட்சத்து 10 ஆயிரத்து 930 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்