தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மண்டி தொகுதியில் கங்கனா ரணாவத் வெற்றி

1 mins read
bbba75bb-2d75-4f1f-9f09-1024bfce40bf
மண்டி தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளா் நடிகை கங்கனா ரணாவத் குடும்பத்தினரிடம் ஆசிபெறுகிறார். - படம்: ஊடகம்

மண்டி: இமாச்சலப் பிரதேசம், மண்டி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளா் கங்கனா ரணாவத் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கைவிடவும் 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் 537,022 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

தோ்தல் வெற்றி குறித்து கங்கனா ரணாவத் கூறுகையில், “இந்த வெற்றி மக்களுக்கானது. இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வா் ஜெய்ராம் தாக்கூர், பாஜக எம்எல்ஏக்கள், தொண்டா்கள், என்னைத் தோ்ந்தெடுத்த மக்களுக்கு எனது மனமாா்ந்த நன்றி.

“குடும்ப அரசியலுக்கு எதிராகவும் சாமானிய மக்களுக்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களித்துள்ளனா். மண்டி தொகுதி மக்களுக்காக முழு மனதோடு பணியாற்றுவேன்,” என்றாா்.

குறிப்புச் சொற்கள்