தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி படுதோல்வி

1 mins read
999feb12-a986-4544-8647-95d327f8a221
ஸ்மிருதி இரானி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி படுதோல்வி அடைந்துள்ளார். அவர் போட்டியிட்ட அமேதி தொகுதியைக் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தோ்தலில், அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி வீழ்த்தினாா். இதைத்தொடா்ந்து 18வது மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ஸ்மிருதி, தனக்கு வெற்றி நிச்சயம் கிட்டும் என்று எண்ணியிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளா் கிஷோரி லாலிடம் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் படுதோல்வி அடைந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்