நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி

1 mins read
a603ee3d-f7c3-4056-a4ee-e9a439fe0648
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயல் குழுவில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க காங்கிரஸ் செயல் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லியில் சனிக்கிழமை நடந்த அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கும்படி கேட்டுக் கொண்டனர்.

காங்கிரஸ் செயல் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல்களைப் போல் அல்லாமல் இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா 234 தொகுதிகளில் வென்றுள்ளது. எனவே, மக்களவையில் இண்டியா கூட்டணி வலுவாகக் குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய காங்கிரசின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியைச் தேர்வு செய்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்