13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

1 mins read
ff6fcdf6-2103-4d96-bf34-5145863dcc86
13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். - படம்: இபிஏ

புதுடெல்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 10) அறிவித்துள்ளது.

பீகாரின் ரூபாலி , மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி, மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா, உத்தரகாண்ட்டில் பத்ரிநாத், மங்களூரு ஆகியவற்றில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு, இமாச்சல பிரதேசத்தின் டேரா, ஹமிர்பூர், நலகர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்