காந்திநகர்: கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலியானதாக குஜராத் மாநில காவல்துறையினர் புதன்கிழமை (ஜூன் 12) கூறினர்.
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்து வந்த மூன்று சிறுமிகள் கீர்த்தி (5), சரஸ்வதி (10) மற்றும் லலிதா (12) காட்டுப்பகுதி அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மூன்று சிறுமிகளும் நள்ளிரவு வரை வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் அவர்களை பல பகுதிகளிலும் தேடினர்.
பின்னர் சிறுமிகள் மூவரும் இறந்தநிலையில் கிணற்றில் கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தமாவாவ் காவல்துறையினர் சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

