தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சார வாகன விற்பனை 40% அதிகரிப்பு

1 mins read
da15fbee-4a95-436a-9f7d-bc905e86177d
விற்பனையான மின்சார வாகனங்களில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பங்கு 94%. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் 2023-24 நிதியாண்டில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 17 லட்சத்துக்கு அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 40.31 விழுக்காடு அதிகம் என்று ஜேஎம்கே ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

விற்பனையான மின்சார வாகனங்களில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பங்கு 94 விழுக்காடு.

மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை 29 விழுக்காடு அதிகரித்து 10 லட்சம் வாகனங்கள் இந்தாண்டு விற்பனையாகியுள்ளன.

ஒட்டுமொத்த விற்பனையில் இரு சக்கர வாகனங்கள் 57 விழுக்காடு பங்கு வகிக்கின்றன.

பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் மூன்று சக்கர வாகனத்தின் மீதான மக்கள் ஆர்வம் அதிகமாக உள்ளதை அறிக்கை காட்டுகிறது. இந்தப் பிரிவில் விற்பனை 56 விழுக்காடு அதிகரித்து 6,34,969 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

குறைவான செலவு, சரக்கு போக்குவரத்துக்கு அதிகரிக்கும் தேவை மற்றும் வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பு ஆகிய காரணங்களால் இந்தப் பிரிவில் அதிக விற்பனை சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கார்களைப் பொறுத்தவரை இந்த நிதியாண்டில் 99,085 மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளன. மின்சாரப் பேருந்துகள் விற்பனை 3,708 ஆக உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்