மும்பை: மும்பை மலாடி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒர்லாம் பிரெண்டன் செராவ் என்பவரின் பிறந்தநாளை ஒட்டி அவரது சகோதரி இணையத்தில் ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார்.
அதை இருவரும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்பெண்ணின் வாயில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அது என்ன என்று எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் ஐஸ்கிரீமில் மனித விரல் காணப்பட்டுள்ளது. இதை கண்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அதை இருவரும் ஆராய்ந்து மனித விரல்தான் என்பதை உறுதிசெய்தனர். உடனடியாக கமலாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த விரலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதுடன், அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

