குவாலியர்: அரசாங்க மருத்துவமனையில் எலித் தொல்லை

குவாலியர்: அரசாங்க மருத்துவமனையில் எலித் தொல்லை

1 mins read
d27cc87b-9053-40e2-bd0b-adf9ec49ddbf
குழந்தைகள் சிகிச்சை அறையில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திற்குப் புகார்கள் கொடுக்கப்பட்டன.  - படம்: இந்திய ஊடகம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் சுற்றித் திரியும் காணொளி ஒன்று சமூக ஊடகத் தளங்களில் வலம்வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் அந்த அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அதில் உள்ள குழந்தைகள் சிகிச்சை அறையில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திற்குப் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில், அந்தக் காணொளியை ‘எக்ஸ்’ சமூகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட மத்தியப் பிரதேசக் காங்கிரஸ், மாநிலத்தில் உள்ள சுகாதார வசதிகளின் நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளது.

‛‛எலிகள் பிரச்சினையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்று மருத்துவமனையின் டீன் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்