ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை மரணம்

1 mins read
1f092869-6f4c-4336-90b9-d75b648025d0
17 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு சனிக்கிழமை (ஜூன் 15) அதிகாலை சுயநினைவற்ற நிலையில் குழந்தை மீட்கப்பட்டது.  - படம்: இந்திய ஊடகம்

சூரத்: குஜராத் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சூரஜ்புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஒன்றரை வயது பெண் குழந்தையான ஆர்வி விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது, 500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை நிலைதடுமாறி விழுந்தது. இதையடுத்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தை 50 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து 17 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு சனிக்கிழமை (ஜூன் 15) அதிகாலை சுயநினைவற்ற நிலையில் குழந்தை மீட்கப்பட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தைகிணறுமரணம்