நீட் தேர்வு மோசடி: மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

நீட் தேர்வு மோசடி: மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 mins read
b5dcf761-3744-44d7-bb46-83bd395ff8f6
சுமார் ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்கு 24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வு எழுதுவதாக காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நீட் தேர்வு மோசடி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “நீட் தேர்வு மோசடி விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தி லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

“மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலம் மோடி அரசின் நீட் ஊழலை மூடி மறைக்கத் தொடங்கியுள்ளார்.

“நீட் தேர்வில் தாள் கசியவில்லை என்றால் கேள்வித்தாள் கசிந்ததாக பீகாரில் 13 குற்றவாளிகள் ஏன் கைது செய்யப்பட்டனர். கல்வித்துறையில் உள்ள மாஃபியா கும்பலுக்கு ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை கொடுத்ததை பாட்னா காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு அம்பலப்படுத்தவில்லையா?

“24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டு மருத்துவர்களாகும் கனவோடு சுமார் ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்கு இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள்.

“சலுகை மதிப்பெண்கள் வழங்கியது, கேள்வித்தாள் கசிவு, தேர்வு மோசடி ஆகிய விளையாட்டுகள் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அரசு சலுகைக் கட்டணத்தில் சீட் பெறுவதைத் தடுக்கும் விளையாட்டை மோடி அரசு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நீட்மாணவர்மோசடி