தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தில் விரைவில் ரயில் சேவை

1 mins read
f0879a9f-338d-4e81-bf8b-a90545836a91
 உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படம். - படம்: ஏஎன்ஐ

ரியாசி: செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என அறியப்படும் செனாப் ரயில் பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று இந்தியாவின் வடக்கு ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்தப் பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 1315 மீட்டர் நீளம் கொண்டது.

“இப்பாலம் நவீனப் பொறியியலின் அதிசயம். இந்தப் பாலத்தின்மீது ரயில் செல்லும் நாள் இம்மாவட்டத்திற்கே புத்துணர்ச்சி தரும் நாளாக அமையும். இந்திய பொறியாளர்களின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்தப் பாலம் உலகின் எட்டாவது அதிசயம். ரயில் சேவை தொடங்கும் தேதியை குறிப்பிட முடியாது என்றாலும் அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்,” என்று ரியாசியின் துணை ஆணையர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்