ஜார்க்கண்ட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை; மூவர் கைது

ஜார்க்கண்ட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை; மூவர் கைது

2 mins read
fed8d232-bcdb-48b4-89ce-9a522a5c9276
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தளபதி ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். - கோப்புப்படம்: ஊடகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள டோன்ட்டோ மற்றும் கொய்கெரா பகுதிகளில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள் என்றும். அவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் அமைப்பின் வட்டாரத் தளபதி என்று கூறப்படுகிறது.

மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக ஜார்க்கண்ட் காவல்துறை பேச்சாளரும் உயர் அதிகாரியுமான அமோல் வி.ஹோம்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.

இதுகுறித்து இன்னொரு காவல்துறை அதிகாரி கூறுகையில், மாவோயிஸ்டுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, புதர்களில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் எங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதையடுத்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று கூறினார். தேடுதல் வேட்டை இன்னும் தொடர்வதாக அவர் கூறினார்.

இதுகுறித்து கூறிய மேற்கு சிங்பம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர், “இந்தத் தேடுதல் வேட்டையின் மூலம் நக்சலைட் குழுவின் முக்கியமான தளபதியும் சக்திவாய்ந்த நக்சலைட் பெண் அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் சத்தீஸ்கர் மாவட்டத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் நக்சலைட் தரப்பில் 8 பேரும், அதிரடிப்படை தரப்பில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

அந்தச் சண்டையில் கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர், நக்சலைட் குழுவின் முக்கியமான வீரர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பீப்பிள்ஸ் லிபரேஷன் கொரில்லா ஆர்மி என்று கூறப்படும் பிஎல்ஜிஏ-யில் முதல் தர வீரர்கள் என்று அதிகாரி சேகர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்