லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிலக்கரி கொண்டு சென்ற சரக்கு ரயில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.
ரயிலின் பெட்டியில் இருந்து புகை வெளியேறியதால் சுல்தான்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை அருகே உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர். இந்த விவகாரத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ரயிலின் இயந்திரத்தில் இருந்து 12வது பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக உள்ளூர் ஊழியர்கள் தனக்கு தகவல் கொடுத்ததாக சுல்தான்பூர் ரயில்நிலையக் கண்காணிப்பாளர் வி கே குப்தா தெரிவித்தார்.
சரக்கு ரயிலில் தீப்பற்றியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

