பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

1 mins read
b59aef66-97b7-4571-a5d9-3c7add908be6
படம்: - ஊடகம்

சண்டிகர்: அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரண் அவரது மகள் ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஜூன் 19ஆம் தேதி பா.ஜ.க மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

கிரண் சவுத்ரி அரியானா முன்னாள் முதலமைச்சர் பன்சி லாலின் மருமகள் ஆவார். மேலும் இவர் பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அதேபோல ஸ்ருதி சவுத்ரி அரியானா காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தவர்.

முன்னதாக, கிரண் மற்றும் ஸ்ருதி இருவரும் செவ்வாய்க்கிழமை காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் கட்சியின் மாநில நிர்வாகம் தனிப்பட்ட துரோகமாக நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டி அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்