தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாவில் குளிர்பான ஆலையைத் தொடங்கவுள்ள முத்தையா முரளிதரன்

1 mins read
0452856c-aaaa-4ee4-a9cc-10f649df8469
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் சுமார் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கவிருக்கிறார். - படம்: இணையம்

கர்நாடகா: இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் சுமார் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கவிருக்கிறார்.

சூழல் பந்துவீச்சுக்குப் புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பான, தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தமது குளிர்பானத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள முரளிதரன், கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு அந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் மென்பான நிறுவனம் தொடங்குவதற்காக முத்தையா முரளிதரன் கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்த மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி.பார்ட்டில் தெரிவித்துள்ளார்.

சாமராஜ நகர் மாவட்டத்தில் உள்ள படனகோபே பகுதியில் 46 ஏக்கர் பரப்பளவில் முரளிதரனின் குளிர்பானம் மற்றும் தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது.

‘முத்தையா பெவரேஜஸ் அண்ட் கன்ஃபெக்‌ஷனரி’ என்ற பெயரில் தொடங்கப்பட உள்ள அந்தத் தொழிற்சாலை ஜனவரி 2025ல் உற்பத்தியைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்