ரூ. 100 கோடி லஞ்சம் கேட்டார் கெஜ்ரிவால்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

ரூ. 100 கோடி லஞ்சம் கேட்டார் கெஜ்ரிவால்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

1 mins read
33cbcef6-64b5-4804-b86e-039eee5749d5
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிணை மனு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

‘‘சவுத் குரூப் எனப்படும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அடங்கிய குழுவிடம் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். தனது கட்சிக்காக இந்த பணத்தை கேட்டுள்ளார். இதில் ரொக்கமாக கணிசமான பணம் கட்சிக்கு தரப்பட்டுள்ளது. அவை கோவா தேர்தலில் செலவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொறுப்பாளர்களாக உள்ள அத்தனை பேரும் குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்,” என்று அமலாக்கத்துறை தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் பிணை மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது.

குறிப்புச் சொற்கள்